ஜனாதிபதித் தேர்தலின் போது வேட்பாளர்கள் மீது அமெரிக்க பாணியிலான தாக்குதல்கள் இடம்பெறலாம் என சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
பென்சில்வேனியாவில் சனிக்கிழமை (13) இடம்பெற்ற பேரணியின் போது முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை கொல்ல முயற்சித்தமை தொடர்பில் அறிந்த உடனே, சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை உடனடியாக பலப்படுத்துமாறு அரசாங்கத்திடம் தெரிவித்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன நேற்று (14) ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவின் பாதுகாப்பை அரசாங்கம் பொறுப்பேற்றுக்கொள்வதால், அவரின் பாதுகாப்பை அதிகரிக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.