follow the truth

follow the truth

November, 28, 2024
HomeTOP2மாகந்துரை மதுஷின் கல்லறைக்கு அருகில் எழுதப்பட்ட வாசகம்

மாகந்துரை மதுஷின் கல்லறைக்கு அருகில் எழுதப்பட்ட வாசகம்

Published on

படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதிக் கிரியைகள் இன்று (13) பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றன.

இது குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இவ்வாறானதொரு பின்னணியில் மாகந்துரை மதுஷின் சடலம் புதைக்கப்பட்ட கொடிகமுவ பொது மயானத்திற்கு முன்பாக அவரது புகைப்படத்துடன் கூடிய பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அதில், “அண்ணா! ஒவ்வொருவராக அனுப்புகிறோம். நாங்கள் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள் “ என்று எழுதப்பட்டிருந்தது.

இதேவேளை, வசந்தவின் பூர்வீக கிராமமாக இருந்த நுவரெலியா நகரமும் வெள்ளைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

கடந்த 8ஆம் திகதி அதுருகிரிய பிரதேசத்தில் பச்சை குத்தும் நிலையமொன்றை திறக்கச் சென்ற கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் மற்றுமொரு நபரும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் கிளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றது.

பாதுகாப்புக்காக பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் அங்கு குவிக்கப்பட்டிருந்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்தியா மற்றும் பங்களாதேஷின் ஆதரவை ரணில் நினைவு கூர்ந்தார்

இலங்கையை எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்பதற்கு இந்தியா மற்றும் பங்களாதேஷ் வழங்கிய ஆதரவிற்கு தாம் எப்போதும் நன்றி...

எய்ட்ஸ் தொற்றாளர்கள் பதிவில் அதிகரிப்பு

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் மூலம் கூட்டாளிகளைத் தேடுவது, சரியான பாலியல் கல்வி இல்லாதது போன்ற காரணங்களால்...

வெள்ளத்தில் அடித்துச் சென்ற உழவு இயந்திரம் – இதுவரை 4 பேரின் உடல்கள் மீட்பு

காரைதீவு - மாவடிபள்ளி பகுதியில் வெள்ளத்தில் உழவு இயந்திரம் அடித்துச் சென்றதில், காணாமல் போனவர்களில் மேலும் இரு சடலங்கள்...