உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரஞ்சித் மத்தும பண்டார, ரவூப் ஹக்கீம், உதய கம்மன்பில, அத்துரலிய ரத்தன தேரர் உள்ளிட்ட 30 பேரின் கையொப்பங்களுடன் இந்தக் கடிதம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை பல்வேறு உத்திகளை கொண்டு ஒத்திவைக்க முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சுமத்தியுள்ளன.
சாத்தியமான முதல்நாளில் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறும் தேர்தலை சுதந்திரமான மற்றும் நியாயமான சூழ்நிலையில் நடத்துவதற்கு அதிகபட்ச சட்ட அதிகாரத்தை பயன்படுத்துமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் எதிர்க்கட்சிகள் இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.