follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1பிங்கிரிய பொருளாதார வலயத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்

பிங்கிரிய பொருளாதார வலயத்தை அபிவிருத்தி செய்ய திட்டம்

Published on

ஏற்றுமதி பொருளாதாரம், உற்பத்தி, சுற்றுலா, தொழில்நுட்பத் துறை, நவீன விவசாய முறை ஆகியவற்றின் ஊடாக நாட்டுக்குள் வலுவான பொருளாதாரத்தைக் கட்டமைக்க முடியும் என்றும், அதற்கு அவசியமான அடித்தளத்தை அரசாங்கம் இட்டுள்ளதெனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இலங்கையின் மிகப் பெரிய ஏற்றுமதி வலயமாக 1000 ஏக்கர் பரப்பளவில் பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் இரண்டாம், மூன்றாம் கட்ட அபிவிருத்தி பணிகளை ஆரம்பித்து வைக்கும் வகையில் இன்று (12) நடைபெற்ற நிகழ்விலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் புதிய ஏற்றுமதிப் பொருளாதாரத்தை வலுவூட்டும் வகையில் புதிய முதலீடுகளை ஸ்தாபிக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்தார்.

பிங்கிரிய ஏற்றமதி வலயம் முழுமைபடுத்தப்பட்டதன் பின்னர் 2600 மில்லியன் டொலர் வருமானத்தை ஈட்டிக்கொள்ள எதிர்பார்ப்பதோடு, 75,000 புதிய வேலைவாய்ப்புக்களும் உருவாக்கப்படவுள்ளது.

இதன்போது பிங்கிரிய ஏற்றுமதி வலயத்தின் நிர்மாண பணிகளை முன்னெடுக்கும் Dongxia Industrial & Commerce Co.Ltd. நிறுவனத்தின் அலுவலகத்தை ஜனாதிபதி, திறந்து வைத்தார்.

இரணவில, பிங்கிரிய, சிலாபம் வரையில் சுற்றுலா வலயமொன்றும் அமைக்கப்படவுள்ளது. இரணவில பிரதேசத்தில் கோல்ப் விளையாட்டு மைதானம் ஒன்று அமைக்கப்படவுள்ளது. அதேபோல் IT வலயமொன்றைக் கட்டமைக்கும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சிலாபம் பெருந்தோட்ட நிறுவனங்களின் தோட்டங்களை நவீன விவசாயத்துக்காக பயன்படுத்திகொள்ள எதிர்பார்க்கிறோம்.

அதன்படி விவசாயம், தொழில்துறை, உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா வர்த்தகம், மீன்பிடித்துறை ஆகியவற்றை மேம்படுத்துவதன் ஊடாக பிங்கிரியவை இந்நாட்டின் பிரதான பொருளாதார வலயமாக மாற்றியமைக்க எதிர்பார்ப்பதோடு, இதற்கு இணையாக பன்னல, குளியாபிட்டிய பகுதிகளிலும் பாரிய அபிவிருத்தி ஏற்படும். இதனால் மாதம்பை பகுதியில் முற்காலத்தில் காணப்பட்ட செழிப்பை மீண்டும் ஏற்படுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தானியங்கள் உட்பட பல வகையான பயிர்களின் உற்பத்தியை அதிகரிக்க வேலைத்திட்டம்

நாட்டில் தானியங்கள் உட்பட பல்வேறு வகையான பயிர்களின் வருடாந்தத் தேவையை பூர்த்தி செய்வதற்காக எதிர்வரும் பெரும்போகத்திலிருந்து விசேட வேலைத்திட்டமொன்று...

அடுத்த வருட முதல் காலாண்டில் வாகனங்கள் இறக்குமதி

கடந்த முதலாம் திகதி முதல் பொது போக்குவரத்து சேவைக்காக பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள் இறக்குமதி ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கார்கள் உள்ளிட்ட இலகுரக...

சுதந்திர கட்சி கூட்டணியாக சிலிண்டர் சின்னத்தில் களமிறங்க தீர்மானம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) நிமல் சிறிபால டி சில்வா அணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர்...