இன்றைய அவசரமான உலகில் சரியான நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாத நிலை உள்ளது. வீட்டு வேலை, பணி சுமை போன்ற காரணங்களால் நேரம் தவறி உணவு சாப்பிடுவதால் பலர் ஆரோக்கிய சீர்கேடுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இன்னும் சொல்லப்போனால் இரவு நேரத்தில் 9.30 மணிக்கு மேலாகவும் பலர் உணவு உண்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது தவறான பழக்கம் என்றும் மாலை 6 மணிக்கு முன்னதாகவே உணவை உட்கொள்ள வேண்டும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
“இரவு உணவை தாமதமாக சாப்பிடுவது போது, வளர்சிதை செயல்பாட்டில் மாற்றம், குளுகோஸ் வளர்சிதை செயலிழப்புகளை ஊக்குவிக்கிறது.
இதற்கு நேர்மாறாக, ஒருநாளின் கடைசி உணவை முன்கூட்டியே சாப்பிடும் போது, இரத்த குளுக்கோஸ், இன்சுலின் உணர்திறன், இரத்தத்தில் நேர்மறையான விளைவைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இது அதிக எடை கொண்டவர்கள் அல்லது உடல்பருமன் கொண்டவர்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும்.”
உங்கள் உடல் படுக்கைக்கு முன் ஒரு கனமான உணவை ஜீரணிக்காது. அதுவே மாலையில் உடனடி ஆற்றல் அதிகரிப்பதை நீங்கள் கவனிக்கலாம். இந்த மாற்றம் இரவுநேர நெஞ்செரிச்சல் மற்றும் அஜீரணம் போன்ற பொதுவான செரிமான அசௌகரியங்களைத் தணிக்கும். ஏனெனில் நீங்கள் படுப்பதற்கு முன் உங்கள் வயிறு காலியாகிவிடும்.”
தாமதமான இரவு உணவு செரிமானத்தை பாதிக்கும் மற்றும் எடை அதிகரிப்புக்கு பங்களிக்கும் என கூறப்படுகிறது.