கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப் பட்டியலில் வேட்பாளராகவும், 2020 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி கிருஷ்மால் வர்ணசூரிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டார்.
சட்டத்தரணி கிரிஷ்மால் வர்ணசூரிய இலங்கை, ஹேக் மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் 24 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டவராவார்.
நாட்டின் 10 சிறந்த இளம் ஆளுமைகளில் ஒருவராகவும் அவர் பெயரிடப்பட்டிருந்தார்.
இந்நாட்டில் திறமையான சட்டத்தரணிகளில் ஒருவராக திகழ்ந்து வரும் அவர் சட்டத்துறையில் பரந்துபட்ட அறிவைக் கொண்டுள்ளதன் காரணமாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் நன்மதிப்பை பெற்ற ஒருவராகவும் திகழ்ந்து வருகிறார்.