follow the truth

follow the truth

September, 20, 2024
HomeTOP2வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார் - ரயில் நிலைய அதிபர்கள் சவால்

வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார் – ரயில் நிலைய அதிபர்கள் சவால்

Published on

சேவையை விட்டு விலகியதாக கருதப்படும் அறிவிப்பின்படி, தங்கள் சேவை இல்லாமல் ரயில் சேவையை நடத்த முடியுமா? என்பதைக் காட்டுமாறு ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

எங்களுக்கு பயமில்லை. வீட்டில் இருக்கவும் நாங்கள் தயார்.
இந்த அடக்குமுறைக்கு எதிராக நாளை மேலும் பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணையவுள்ளன. ரயில் நிலைய அதிபர் ஒருவர் கூட இந்த கடிதங்களுக்கு பயப்படப்போவதில்லை. நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. பயணிகளுக்கு ஏற்படும் சிரமம் குறித்து. அதிகாரிகள் தீர்வு காண வேண்டும் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார்.

ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ். எஸ். முதலிகே விடுத்த அறிவித்தலுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை ரயில்வே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்களுக்கு இறுதி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் இன்று மதியம் 12.00 மணிக்கு அந்தந்த ரயில் நிலையம் அல்லது அருகில் உள்ள ரயில் நிலையத்தில் பணிக்கு சமூகமளிக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை பொருட்படுத்தாது பணிப்புறக்கணிப்பில் ஈடுபடும் ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் ரயில் கட்டுப்பாட்டாளர்கள் சேவையில் இருந்து விலகி சென்றதாக கருதப்படுவார்கள் என ரயில்வேயின் பதில் பொது முகாமையாளர் எஸ். எஸ். முதலிகே தெரிவித்துள்ளார்.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும் பணிகள் நாளை காலை முதல் ஆரம்பிக்கப்படும்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆனந்த...

ஜனாதிபதித் தேர்தல் – பாதுகாப்பிற்காக முப்படைகளும் இணக்கம்

ஜனாதிபதித் தேர்தலின் போது அமுல்படுத்தப்பட வேண்டிய இறுதி பாதுகாப்பு வேலைத்திட்டம் பொலிஸ்மா அதிபர்களுக்கு இன்று (19) வழங்கப்பட்டதாக பொது...