பிள்ளைகளுக்கு வழங்கக் கூடிய சிறந்த விடயம் கல்வியே ஆகும். அதை பணத்தால் மதிப்பிட முடியாது. உயர் தரத்திலான சர்வதேச தரம்வாய்ந்த கல்வி வழங்கப்பட வேண்டும். முதலாவதாகவும், இரண்டாவதாகவும், மூன்றாவதாகவும் நல்ல கல்வியையே வழங்க வேண்டும். இந்த வேலைத்திட்டத்தில் கல்விக்கு முன்னுரிமை வழங்கி செயல்படுவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ்,ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன வன்னி, மன்னார் கொண்டச்சி முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இடம்பெற்றது.
ஸ்மார்ட் பிள்ளைகள் மூலம் ஸ்மார்ட் நாட்டை உருவாக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும். அதனூடாக ஸ்மார்ட் உலகளாவிய பிரஜை உருவாக்கப்படுவார் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
நம் நாட்டில் சிங்களவர்கள், முஸ்லிம்கள், பர்கர்கள், தமிழர்கள் போன்ற இனக்குழுக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் சாதி, மதத்தை மறந்து நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணைந்து அபிவிருத்தியின் விடியலை ஏற்படுத்த கைகோர்க்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.