பட்டதாரிகளுக்கு வேலை வழங்குவதற்கு எதிராக நீதிமன்றத்திற்கு சென்றவர்களினால் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சர் வலியுறுத்துகிறார்.
வேலையற்ற பட்டதாரிகள் தொடர்பில் இன்று (9) பாராளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
பட்டதாரிகளை வேலைக்கு அமர்த்துவதற்கு எதிராக சில குழுக்கள் கடந்த காலங்களில் நீதிமன்றத்திற்கு சென்றிருந்தன. இதனால் பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. மேல்மாகாணத்தில்தான் இந்த ஆசிரியர் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. மேல்மாகாணத்தில் ஆசிரியர் பரீட்சை நடாத்தப்பட்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர் ஆனால் பாடவாரியாக ஆட்சேர்ப்பு நடைபெறும் போது சிலர் கைவிடப்பட்டுள்ளனர் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்
ஆளுநருடன் கலந்துரையாடிய பின்னர் இது தொடர்பாக தீர்மானங்களை எடுத்தோம். மேல் மாகாணத்தில் வெற்றிடங்களை விட பட்டதாரிகளே அதிகம். அதனால்தான் பரீட்சை நடத்தப்பட்டது. ஆனால் ஏனைய மாகாணங்களில் அவ்வாறான நிலை இல்லை என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேலும் தெரிவித்தார்