follow the truth

follow the truth

September, 29, 2024
Homeஉள்நாடுயாழில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – சம்பிக்க!

யாழில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் – சம்பிக்க!

Published on

யாழ்ப்பாணத்தின் தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களை அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு இன்று  விஜயம் செய்துள்ள முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, மேலும் தெரிவித்த அவர், “நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொழும்பு, காலி போன்ற நகரங்களினை போல யாழ்ப்பாண நகரத்தினையும் அபிவிருத்தி செய்யும் முகமாக பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் வடபகுதியில் முன்னெடுக்கப்பட்டன.

குறிப்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் பல மில்லியன் ரூபாய் செலவில் பல்வேறுபட்ட அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக தூர இடங்களுக்கான பேருந்து தரிப்பு நிலையம், யாழ்ப்பாண மாநகர சபைக்கான புதிய கட்டடத் தொகுதி உட்பட மேலும் பல திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும் தற்போது அவ்வாறான திட்டங்களை தொடர்வதற்கான நிதி ஒதுக்கீடுகள் அனைத்தும் இந்த அரசினால் நிறுத்தப்பட்டுள்ளன. ஏன் அவ்வாறு செய்கின்றார்களென தெரியவில்லை. அரசியல் பழிவாங்கலுக்காகவே இவ்வாறு செய்கின்றார்கள் என நினைக்கின்றேன்.

ராஜபக்ஷக்கள் தமது பெயர் குறிப்பிடப்படும் அபிவிருத்தி திட்டங்களை மாத்திரமே செயற்படுத்துவார்கள் மக்கள் நலன் சார்ந்து செய்யப்பட மாட்டார்கள் என்பதே உண்மை.

நான் யாழ்ப்பாணத்திலிருந்து இந்த அரசாங்கத்திற்கு ஒரு கோரிக்கையை முன் வைக்கின்றேன். தடைப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கி மக்கள் சார்ந்த திட்டங்களை முன்னெடுங்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29)...

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும்...