இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்யா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ரஷ்ய ஜனாதிபதியிடமிருந்து அமோக வரவேற்பு கிடைத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு மோடி அந்த நாட்டுக்கு வருவது இதுவே முதல் முறை.
இதனையடுத்து ரஷ்ய ஜனாதிபதி மோடிக்கு சிறப்பு தனி இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.