சில உணவுகள் மீண்டும் சூடுபடுத்தும்போது அவற்றின் ஊட்டச்சத்துக்களை இழக்கின்றன. மற்றவை நமக்கு விஷமாக மாறுகின்றன.
எனவே, நாம் என்ன உணவு சாப்பிடுகிறோமோ அதை எப்போதுமே மீண்டும் மீண்டும் சூடுப்படுத்தி உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
அதிலும் இந்த உணவுகளை சூடுபடுத்தவேக் கூடாதாம்.
உருளைக்கிழங்கு அதிக நேரம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்தால், அவற்றின் ஊட்டச்சத்து மதிப்பு இழக்க வாய்ப்புள்ளது. அவற்றை சூடாக்குவது நச்சுத்தன்மையுடையதாக மாறும்.
கீரையில் அதிகளவு இரும்புச்சத்து மற்றும் நைட்ரேட் உள்ளன. இதிலிருக்கும் நைட்ரேட்ஸ் சூடுபடுத்தும்போது நைட்ரைட்டாக மாறும். இது, புற்றுநோயை உண்டாக்கும். கீரை உணவுகளை மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடுவதால், செரிமான பிரச்னைகள் உண்டாகும். குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். எனவே, கீரையைச் சூடுபடுத்தி சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
முட்டை அதிக புரோட்டீன் நிறைந்த உணவு. நன்றாக வேகவைத்த அல்லது வறுத்த முட்டையை மீண்டும் சூடுபடுத்தினால், அது விஷமாக மாறும். இது, செரிமான பிரச்னை மற்றும் வயிற்றுக்கோளாறுகளுக்கு வழிவகுக்கும். எனவே, முட்டையை எக்காரணம் கொண்டும் ஒருமுறைக்கு மேல் சூடுபடுத்திச் சாப்பிடக் கூடாது.
எந்த வகை சமையல் எண்ணெயாக இருந்தாலும், அதைத் திரும்பத் திரும்ப சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும். இது புற்றுநோய், இதய நோய்கள் ஏற்படக் காரணமாகவும் அமையும்.
பீட்ரூட்டும் கீரை வகைகளைப் போல நிறைய நைட்ரேட்ஸை உள்ளடக்கியது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து பயன்படுத்தக் கூடாது.