follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP2நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 35 மோப்ப நாய்கள்

நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 35 மோப்ப நாய்கள்

Published on

பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கென நெதர்லாந்திலிருந்து 35 நாய்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

நெதர்லாந்தின் K10 Working dogs என்ற தனியார் கால்நடை பண்ணையிலிருந்து இந்த நாய்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதற்கென 58 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. Belgian Malinois வகையைச் சேர்ந்த 13 மோப்ப நாய்கள் உள்ளடங்குவதுடன் German Shepherd வகையைச் சேர்ந்த 12 நாய்கள் மற்றும் English Spaniel வகையைச் சேர்ந்த 10 நாய்கள் இவ்வாறு நாட்டிற்கு வந்துள்ளன.

8 முதல் 12 மாதங்களுக்கிடைப்பட்ட வயதுகளைக் கொண்ட இவற்றில் 21 பெண் நாய்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

அரசு இனவாதமாகவே செயல்படுகிறது – கஜேந்திரகுமார்

பட்டலந்த சித்திரவதை முகாம் விடயத்தில் சர்வதேச பங்களிப்பைப் பற்றி சிந்திக்கும் தற்போதைய அரசாங்கம் தமிழர்களின் இனப்பிரச்சினை தொடர்பான சர்வதேச...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...