இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் உச்சம் பெற்றிருந்த Floppy Disk பயன்பாட்டை ஜப்பான் அரசாங்கம் முற்றாக கைவிட்டுள்ளது
அனைத்து கட்டமைப்புகளில் இருந்தும் அது நீக்கப்பட்டிருப்பதாக ஜப்பான் குறிப்பிட்டுள்ளது.
1,000க்கும் அதிகமான ஒழுங்கு முறை தேவைகளுக்கு இது பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த விதி தற்போது நீக்கப்பட்டு விட்டதாக டிஜிட்டல் அமைச்சர் டாரோ கோனோ தெரிவித்துள்ளார்.
1960களில் சதுர வடிவத்தில் உருவாக்கப்பட்ட சேமிப்புக் களஞ்சியமான Floppy Disk 1990 களில் மிக முக்கிய சாதனமாக மாறியது. அதிக உச்ச திறன் கொண்ட Floppy Disk வெறுமனே 1.44 MB தரவை மாத்திரமே சேமிக்கும்.