follow the truth

follow the truth

July, 8, 2024
HomeTOP2கனடா வரலாற்றில் இராணுவ தளபதியாகும் முதல் பெண்

கனடா வரலாற்றில் இராணுவ தளபதியாகும் முதல் பெண்

Published on

கனடாவின் இராணுவ தளபதியாக இருந்து வரும் வெய்ன் அயர் விரைவில் ஓய்வு பெற உள்ளார்.

இதையொட்டி புதிய இராணுவ தளபதியாக மூத்த பெண் இராணுவ அதிகாரியான ஜென்னி கரிக்னன் என்பவரை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ நியமித்துள்ளார்.

இதன் மூலம் கனடா வரலாற்றில் இராணுவ தளபதியாகும் முதல் பெண் என்கிற பெருமையை ஜென்னி கரிக்னன் பெற்றுள்ளார்.

தற்போது ஆயுத படைகளின் தொழில்சார் நடத்தை மற்றும் கலாசாரத்தின் தலைவராக உள்ள ஜென்னி கரிக்னன் கடந்த 35 ஆண்டுகளாக இராணுவத்தில் சேவை புரிந்து வருகிறார்.

2008-ம் ஆண்டில், கனடா ஆயுத படைகளின் வரலாற்றில் ஒரு போர் படை பிரிவுக்கு தலைமை தாங்கிய முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.

அதைத்தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் சிரியாவில் கனடா படைகளை வழிநடத்திய ஜென்னி கரிக்னன், 2019 முதல் 2020-ம் ஆண்டு வரை, ‘நேட்டோ மிஷன் ஈராக்’கை வழிநடத்தினார்.

LATEST NEWS

MORE ARTICLES

பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறை அறிமுகம்

இந்த வருட இறுதிக்குள் ரயில்வே உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து பயணச் சீட்டுகளுக்கான டிஜிட்டல் விநியோக முறையொன்றை அறிமுகப்படுத்தப்படும் என...

ஹஜ் பயணத்தில் மக்கள் இறந்த சோகம் : தவறு நடந்தது எங்கு?

சவுதி அரேபியாவில் ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்டவர்களில் 1300க்கும் அதிகமானோர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்,...

ஞானசார தேரருக்கு பொதுமன்னிப்பு வழங்க சாக்குப்போக்கு சொல்லும் அந்த அமைச்சர் யார்?

சிறை வைக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு...