follow the truth

follow the truth

July, 7, 2024
HomeTOP2முதல்முறையாக சர்வதேச ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாநாடு சவுதியில்

முதல்முறையாக சர்வதேச ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாநாடு சவுதியில்

Published on

2024 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் திகதியை ‘உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினம்’ ஆக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.

ஒட்டிப் பிறந்த இரட்டையர்களின் நிலையைப் பற்றி வலியுறுத்தவும், அவர்களின் சிகிச்சை, பராமரிப்பு மற்றும் நல்வாழ்வு உட்பட சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரத்தை மேம்படுத்தவும் இந்நாள் முக்கியப்படுத்தப்பட்டுள்ளது.

பஹ்ரைன், மொராக்கோ, கத்தார் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்த முயற்சியை சவூதி அரேபியா முன்மொழிந்தமை குறிப்பிடத்தக்கது.

1990 ஆம் ஆண்டு ஒட்டிப்பிறந்த இரட்டையர்களை பிறிப்பதற்கான இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, சவூதி அரேபியா இத்துறையில் உலகில் முன்னணி வகிக்கக்கூடிய நாடாக இருந்து வருகிறது.

சவூதி அரேபியா, 26 நாடுகளைச் சேரந்த 139 இரட்டையர்களை பரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளதோடு 61 ஜோடி இரட்டையர்களை வெற்றிகரமாகப்பிரித்தும் உள்ளது.

உலக ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள் தினத்தின் முக்கியத்துவத்தை மேலும் வலியுறுத்தும்வகையில்,சவூதி அரேபியா 24-25 நவம்பர் 2024 அன்று ரியாத் நகரில் முதல்முறையாக சர்வதேச ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் மாநாட்டை நடத்தவுள்ளது.

இந்த மாநாட்டில் ‘இணைந்த இரட்டையர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களில் பிரிவினையின் பன்முகதாக்கத்தை ஆராய்தல்’ என்ற தலைப்பில் ஒரு குழுக்கலந்துரையாடல் அடங்கும், இது பிரிவினை அறுவை சிகிச்சையின் உடலியல், உளவியல் மற்றும் சமூக விளைவுகளை ஆராயும் விதத்தலும் அமையும்.

LATEST NEWS

MORE ARTICLES

200 பாடசாலைகளுக்கு 2,000 டெப் கணனிகள்

புதிய பொருளாதாரத்துடன் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மேம்பட்ட கல்வி முறையும் அவசியமானது எனவும்,...

தயாசிறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைவதற்கு...

மாரிடேனியா படகு விபத்தில் 89 பேர் பலி

வடமேற்கு ஆப்பிரிக்க நாடான மாரிடேனியா அருகே அட்லாண்டிக் கடல் பகுதியில் அகதிகள் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 89 பேர்...