கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனையும் அவரது உறவினரையும் அரசியல் மற்றும் நிதி ஆதாயங்களுக்காக சில தமிழ் அரசியல்வாதிகள் உயிர்ப்பிக்க முயற்சிப்பதாக வேலுப்பிள்ளை பிரபாகரனின் அண்ணன் மகன் கார்த்திக் மனோகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்திய தமிழ் அரசியல்வாதி நெடுமாறன் மற்றும் காசி ஆனந்தன் மற்றும் இலங்கையின் முன்னாள் தமிழ் அரசியல்வாதி கே. சிவாஜிலிங்கம் தனது மாமா மற்றும் உறவினரை உயிர்ப்பிக்க முயல்வதாக அவர் கூறுகிறார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “.. மாமாவை வாழவைப்பதாக கூறி பணம் வசூலிக்கும் பெரும் மோசடி உலகமெங்கும் நடைபெற்று வருவதாகவும், இவ்வாறான மோசடியாளர்களிடம் வீழ வேண்டாம் என உலகமெங்கும் உள்ள தமிழ் மக்களை கேட்டுக்கொள்கின்றேன்..”
இலங்கையிலும் இந்தியாவிலும் உள்ள சில தமிழ் அரசியல்வாதிகளும் சில புலம்பெயர் தமிழ் குழுக்களும் இந்த பெரும் மோசடியை செய்து வருவதாக மனோகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறந்தவர்களுக்கு உரிய மரியாதை கொடுப்பது மிகவும் முக்கியம் என்றும், தமிழ் மக்களின் அவல நிலைக்கு உண்மையான காரணம் இது போன்ற மோசடிக்காரர்களே என்றும் கூறுகிறார். மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே. சிவாஜிலிங்கத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசிடம் கோரிக்கை விடுப்பதாகவும் மனோகரன் கூறுகிறார்.
2009ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நிறைவடைந்த பின்னர் சில புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் இவ்வாறு பணம் வசூலித்ததாகவும், தற்போது அவர் இருந்திருந்தால், 70 வயதான வேலுப்பிள்ளை பிரபாகரனைப் பராமரிப்பதற்கு அந்தப் பணத்தைப் பயன்படுத்துவதாகப் புலம்பெயர் தமிழ்க் குழுக்கள் பணம் வசூலித்திருக்கும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பிரபாகரன் பெயரை விற்று உலகம் முழுவதும் உள்ள அப்பாவித் தமிழ் மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் மோசடிக்காரர்களை உலகுக்கு அம்பலப்படுத்த கடைசியில் உண்மையைச் சொல்ல முடிவு செய்ததாக மனோகரன் கூறுகிறார்.
போரின் இறுதி நாட்களில் தனது மாமா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கொல்லப்பட்டதாக மனோகரன் கூறுகிறார், மேலும் இறந்தவர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் என்று மீண்டும் கோருகிறார்.