follow the truth

follow the truth

September, 18, 2024
HomeTOP1ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை

Published on

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விற்பனை செய்யப்படவில்லை எனவும், மறுசீரமைப்பு பணிகள் மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனைத் தெரிவித்தார்.

இந்த நாட்டை பேரழிவில் இருந்து மீட்பதற்கான முதல் அடியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ளார். இரண்டாவது படி, அதைப் பாதுகாத்து முன்னேறுவதாகும். இல்லையேல் நாடு 02 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைக்கு திரும்புவதை தடுக்க முடியாது என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தெரிவித்துள்ளார்.

இந்த வருட வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகள், பிரதேச சபைகள், அரச திணைக்களங்கள் மற்றும் நலன்புரி போன்ற சமூக பாதுகாப்பு நலன்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாம் ஸ்ரீலங்கன் விமான சேவையை மறுசீரமைக்கும் பணிகளையே நாம் மேற்கொள்கின்றோம் மாறாக அதனை விற்கவில்லை.

இலங்கையின் சட்டத்தின்படி ஸ்ரீலங்கன் விமான சேவையில் 49% மட்டுமே வேறு நிறுவனத்திற்கு வழங்க முடியும். அதற்கும் சர்வதேச அளவில் குறைந்தபட்ச ஆர்வமே உள்ளது. அதற்கு 06 நபர்களே முன்வந்துள்ளனர். அவர்களில் பொருத்தமான எவரையும் நாங்கள் இனங் காணவில்லை. இலங்கை தொழில்முனைவோருக்கு வழங்குவதாக இருந்தாலும் அவர்களும் அவர்களது இயலுமையை நிரூபிக்க வேண்டும்.

இந்தியாவின் 69 மில்லியன் டொலர் நிதியுதவியின் கீழ் காங்கேசந்துறை துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படும்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கப்பல் சேவை மிக விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என என்னிடம் தெரிவித்தார்” என்றும் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விசேட தேவையுடையவர்களுக்கு வாக்களிப்பு நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் விசேட தேவையுடையவர்கள் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ...

வாக்களிக்கச் செல்பவர்களுக்காக விசேட பஸ் சேவை

ஜனாதிபதித் தேர்தலுக்கு வாக்களிக்கச் செல்லும் பயணிகளுக்காக இலங்கை போக்குவரத்துச் சபை விசேட பஸ் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளது. வாக்களிப்பதற்காக கிராமங்களுக்குச்...

வாக்கெடுப்பு நிலையத்தினுள் பிரவேசிக்க அனுமதியளிக்கப்பட்டவர்கள்

ஜனாதிபதித் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்துக்குள் பிரவேசிப்பதற்கு அனுமதியளிக்கப்பட்டவர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் விசேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.