புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தியா – தமிழகம் முழுவதும் உள்ள பானி பூரி கடைகளில் தீவிர சோதனை மேற்கொள்ள இந்திய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.
கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், அங்குள்ள சாலையோர கடைகள் முதல் உயர்தர உணவக கடைகளில் பானி பூரி மாதிரிகளை கைப்பற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் புற்றுநோயை ஏற்படுத்தும் செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.