follow the truth

follow the truth

July, 5, 2024
HomeTOP2பியூமி குறித்து டிரான்

பியூமி குறித்து டிரான்

Published on

பியூமி ஹன்சமாலி பாதாள உலக தலைவர் ஒருவரின் பணத்தை பயன்படுத்துவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி, அவரது சொத்துக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

எவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்தாலும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகத்தை அடக்கி யுக்திய நடவடிக்கையை மக்கள் உணரும் வகையில் ஜூலை 04 ஆம் திகதி முதல் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்நிலையில், குறுகிய காலத்தில் பல கோடி ரூபாவை சட்டவிரோதமாகவும் சந்தேகத்திற்கிடமாகவும் சம்பாதித்த மாடல் அழகி பியூமி ஹன்சமாலி நடத்தும் அழகுசாதனப் பொருட்கள் அவரது நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்டதா என்பது குறித்து இரகசியப் பொலிஸ் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அழகுசாதனப் பொருட்கள் தயாரிக்கப்படும் இடங்கள் தொடர்பான தகவல்களை வெளிக் கொண்டுவர குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, பியூமி ஹன்சமாலி நடத்தும் இந்த வியாபாரத்தின் மூலம் வருமான வரி செலுத்துதல் மற்றும் நடத்தப்பட்ட வியாபார கணக்குகள் குறித்தும் அந்த பிரிவு விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மாடல் அழகி பியூமி ஹன்சமாலி நடத்தும் இந்த வியாபாரம் நிறுவன பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பான தகவல்களும் அதே அலுவலகத்தால் கொண்டு வரப்பட்டுள்ளதாக ரகசிய பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொண்டுவரப்பட்ட தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இரகசிய பொலிஸ் வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

LATEST NEWS

MORE ARTICLES

நாளை முதல் 17 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பண்டிகை நாளை (06) ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட...

பாராளுமன்றம் ஜூலை 09 முதல் கூடவுள்ளது

பாராளுமன்றம் ஜூலை 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர...

ஐ.ம.சக்தி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவிற்கு இடையீட்டு மனுதாரராக ஐக்கிய மக்கள் சக்தி...