பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தை தொடர்வதற்காக கடனுதவி வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுப்பதாக அகில இலங்கை பாடசாலை சிறுவர் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.
விலை திருத்தத்தின்படி, பெட்றோல் மற்றும் சுப்பர் டீசலின் விலைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும், ஒட்டோ டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை எனவே போக்குவரத்து கட்டணத்தை குறைக்க முடியாது என சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்தார்.