follow the truth

follow the truth

January, 15, 2025
Homeஉள்நாடு475 புதிய வைத்தியர்கள் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு

475 புதிய வைத்தியர்கள் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு

Published on

475 புதிய வைத்தியர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பயிற்சியினை ஆரம்பிப்பதற்கான நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வு நேற்று(01) கொழும்பு பல்கலைக்கழக வைத்திய பீடத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இவ்வாறு நியமனம் கிடைக்கப்பெற்ற புதிய வைத்தியர்கள் நாடு பூராகவும் உள்ள 68 அரசாங்க வைத்தியசாலைகளில் ஒரு வருட பயிற்சிக்காக இணைப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், நாட்டு வைத்தியம் பீடங்களில் 05 வருட காலம் கல்வி செயற்பாடுகளை வெற்றிகரமாக பூர்த்தி செய்த இத வைத்தியர்களுக்கு மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கும் சுகாதார அமைச்சரின் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

ஒரு வருட கால மட்டுப்படுத்த பயிற்சியை வெற்றிகரமாக பூர்த்தி செய்யும் வைத்தியர்கள் இலங்கை மருத்துவ சங்கத்தில் முழுமையான பதிவிற்கு உட்படுத்தப்பட்டு தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மல்வத்து ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

மல்வத்து ஓயாவின் தாழ்நிலப்பகுதிகளில் சிறிய அளவான வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. வெங்கலச்செட்டிக்குளம், மடு, முசலி, நானாட்டான்...

இரவு நேரங்களில் சீகிரியா திறக்கப்படமாட்டாது

வரலாற்று சிறப்புமிக்க சீகிரியாவை இரவு நேரங்களில் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறப்பது குறித்த செய்திகளை புத்தசாசன, மத மற்றும் கலாசார...

ஒரு மூடை சீமெந்தின் விலை 100 ரூபாவால் குறைக்க தீர்மானம்

சீமெந்துக்கான செஸ் வரியை குறைப்பதற்கு நிதி அமைச்சின் அதிகாரிகள் முன்வைத்த யோசனைக்கு அரசாங்க நிதி பற்றிய குழுவின் அனுமதி...