follow the truth

follow the truth

July, 4, 2024
HomeTOP1ட்ரம்ப் இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது

ட்ரம்ப் இற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய முடியாது

Published on

அமெரிக்க ஜனாதிபதி ஒருவரின் பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ முடிவுகளை எதிர்த்து ஒருபோதும் வழக்குத் தொடர முடியாது என்றும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும் இது பொருந்தும் என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜனாதிபதியாக இருக்கும் போது பணிக்காலத்தை தாண்டி சிறப்புரிமை நீட்டிக்கப்படுவதாகவும், இதன் காரணமாக டொனால்ட் டிரம்ப் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதில் சில தடைகள் இருப்பதாகவும் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
2020 ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மாற்ற சதி செய்ததாக டிரம்ப் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடு 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற பெஞ்ச் முன்னிலையில் விசாரிக்கப்பட்டு 6 நீதிபதிகள் உடன்பாட்டுடன் தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் இந்த முடிவை அறிவித்த பிறகு, 2020 ஜனாதிபதித் தேர்தலின் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்கும் சதியின் கீழ் டொனால்ட் டிரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நீதிபதியான மாவட்ட நீதிபதி தன்யா சுட்கானுக்கு இந்த முடிவு அனுப்பப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு டொனால்ட் டிரம்ப் தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் ஜனாதிபதி பைடன் இந்த முடிவை கடுமையாக விமர்சித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

சுங்கத்துறை அதிகாரிகளின் போராட்டம் கைவிடப்பட்டது

இலங்கை சுங்க பணியாளர்கள் இன்றும்(04) நாளையும்(05) முன்னெடுக்கவிருந்த போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத்...

சதொச அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்தது

லங்கா சதொச நிறுவனம் பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இதன்படி, உருளைக்கிழங்கு (சீனாவில் இருந்து இறக்குமதி), சிவப்பு...

அல்டயார் அடுக்குமாடியில் இருந்து குதித்த மாணவி சம்பவத்தன்று பாடசாலையில் இருந்து விலக்கப்பட்டாரா?

கொம்பனி வீதி அல்டயார் அடுக்குமாடி குடியிருப்பின் 67வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படும் 15...