follow the truth

follow the truth

July, 4, 2024
Homeலைஃப்ஸ்டைல்உங்கள் முகத்தை எப்படிக் கழுவுகிறீர்கள்?

உங்கள் முகத்தை எப்படிக் கழுவுகிறீர்கள்?

Published on

காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு முகம் கழுவும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றுவோம். சிலருக்கு சருமத்தில் வறட்சி, சருமம் சிவத்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கலாம்.

அதற்கு சரியான சருமப் பராமரிப்பு பொருட்களைப் பயன்படுத்துவதோடு, முகத்தை எப்படி கழுவ வேண்டும் என்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். முறையாக முகம் கழுவாவிட்டால் சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

முகத்தை சுத்தம் செய்வதற்கு முன்பு கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

அழுக்கான கைகளை கொண்டு முகத்தை கழுவுவது, அழுக்கு துண்டை கொண்டு முகம் துடைப்பது போன்றவற்றால் சருமத்தில் பாக்டீரியா, அழுக்கு படிவதற்கும், சரும நோய்த் தொற்றுகளுக்கும் வழிவகுக்கும்.

வெயில் காலத்தில் குழாயில் இருந்து வரும் சூடான நீர் முகம் கழுவுவதற்கு ஏற்றதல்ல. அது சருமத்தில் உள்ள இயற்கை எண்ணெய் பசை தன்மையை அகற்றி, வறட்சி, எரிச்சல், சிவத்தல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.

வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த நீர் கொண்டு முகம் கழுவுவது தான் சரியானது.

முகத்தை கழுவும்போது உள்ளங்கைகள் அல்லது விரல் நுனிகளை கொண்டு மென்மையாக வட்ட வடிவில் மசாஜ் செய்வது நல்லது.

கைகளை கொண்டு சருமத்தை அழுத்தி தேய்ப்பது, துணியைக் கொண்டு முகத்தை அழுத்தமாக துடைப்பது சருமத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

காலையில் ஒருமுறை, இரவில் ஒருமுறை முகத்தை சுத்தம் செய்யலாம். வெளியே செல்பவராக இருந்தால் சுற்றுப்புற மாசுபாட்டால் முகத்தில் படியும் அழுக்கு மற்றும் வியர்வையை அகற்ற கூடுதலாக ஒரு முறை முகம் கழுவலாம்.

எண்ணெய்ப் பசை சருமம் கொண்டவராக இருந்தால் மூன்று முறைக்கு மேல் முகம் கழுவும்போது சருமத்தில் உள்ள ஈரப்பதம் நீங்கக்கூடும்.

எனவே சரும நிபுணர்களின் ஆலோசனை பெற்று அதற்கேற்ப செயல்படுவது சிறந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

பானி பூரியை தடை செய்ய திட்டம்?

புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தியா - தமிழகம்...

இலங்கையில் மிளகாய் ஐஸ்கிரீம் – விரைவில் சந்தைக்கு

வெலிமடை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் சுவைகொண்ட புதிய வகை ஐஸ் கீரிமை தயாரித்துள்ளார். ஊவா பல்கலைக்கழகத்தின் உணவு...

திடீரென ஜிம் செய்வதை நிறுத்தினால் என்ன நடக்கும்?

உடல் ஆரோக்கியமாக இருக்க, ஒருவர் தவறாமல் உடற்பயிற்சி அல்லது யோகா பயிற்சி செய்ய வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில், இளைஞர்கள்...