வெலிமடை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் சுவைகொண்ட புதிய வகை ஐஸ் கீரிமை தயாரித்துள்ளார்.
ஊவா பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் வழிகாட்டலில் சுகாதாரத்திற்கு ஏற்ற வகையில் மிளகாய் ஐஸ் கிரீம் தயாரிக்கப்பட்டுள்ளது.
விவசாய நவீனமயப்படுத்தலின் தொழில்நுட்ப மற்றும் நிதி பங்களிப்பில் லசந்த ருவன் லங்காதிலக்க என்ற விவசாயி மிளகாய் ஐஸ் கீரிமை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த புதிய வகை ஐஸ் கீரிமின் சுவையை அறியும் வகையில் அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அது வழங்கப்பட்டது.
காரம் மற்றும் இனிப்புச் சுவை இதில் கலந்துள்ளமை விசேட அம்சமாகும்.
சிறுவர்கள் மற்றும் பெரியோர்களுக்கென இரு பிரிவுகளைக் கொண்ட தயாரிப்பாக இதனை விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.