follow the truth

follow the truth

July, 2, 2024
Homeஉள்நாடுகிராமத்தில் போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கை கிராம அதிகாரிகளுக்கு

கிராமத்தில் போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கை கிராம அதிகாரிகளுக்கு

Published on

போதைப்பொருள் வலையமைப்பை முறியடிக்கும் நடவடிக்கைக்காக கிராம சேவைக் களங்களில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறித்து அறிக்கை தயாரிக்க பொலிஸ் பிரிவு மட்டத்தில் உள்ள ஒவ்வொரு கிராம அதிகாரிகளையும் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் உத்தரவிட்டுள்ளார்.

பொலிஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் பிரதேச மட்டத்திலுள்ள கிராம உத்தியோகத்தர்களை தொடர்பு கொண்டு இந்த அறிக்கையை தயாரிப்பது பொலிஸ் பிரிவுகளுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் குறிக்கோள், அறிக்கையின் மூலம் அடையாளம் காணப்பட்ட போதைக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வுக்கு அனுப்புவதும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் போதைப்பொருள் விற்பனை செய்யக்கூடிய சந்தையை உடைப்பதும் ஆகும்.

மேல்மாகாணத்தில் கொழும்பை அண்மித்த பகுதிகளில் நூறு வீடுகள் கணக்கெடுக்கப்பட்டால் குறைந்தது ஐம்பது போதைக்கு அடிமையானவர்களாவது கண்டுபிடிக்கப்பட வேண்டும் எனவும், ஆனால் கடந்த 6 மாதங்களில் வெறும் மூன்று வீதமே காணப்படுவதாகவும் பொலிஸ் மா அதிபர் சிரேஷ்ட அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளார். ‘யுக்திய’ நடவடிக்கையின் மூலம் மேல் மாகாணத்தில் புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்றும், இதனால் போதைப்பொருள் வலையமைப்பின் சந்தையை உடைக்க முடியாது.

கடந்த ஆறு மாதங்களில், ஒன்பது மாகாணங்களில் ‘யுக்திய’ நடவடிக்கைகளின் மூலம் 184,862 போதைப்பொருள் தொடர்பான சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், அவர்களில் 5565 பேர் புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

2024 ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற இலங்கை வீராங்கனைகள்

தருஷி கருணாரத்ன (Tharushi Karunaratne) மற்றும் டில்ஹாணி லேகம்கே (Dilhani Lekamge)ஆகியோர் 2024 ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெறவுள்ள...

மருந்து விலைக்கான வர்த்தமானி வெளியீடு

மருந்துகளுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. மருந்து விலைகள் மற்றும் முன்னுரிமைக்கமைய அதிகபட்ச...

ஜூனில் 11 ரயில்கள் தடம்புரள்வு

கடந்த மாதம் மாத்திரம் 11 ரயில்கள் தடம்புரண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. மலையகப் பாதையில் தண்டவாளங்களின் பராமரிப்பு இன்மையால் சில ரயில்கள் தடம்புரண்டுள்ளன. பெரும்பாலான...