இணையவழி நிதிமோசடியில் ஈடுபட்ட 30 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து பல மடிக்கணினிகள் மற்றும் கையடக்க தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தார்.
சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.
முன்னதாக இலங்கையில் இருந்து இணையவழி நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 115 பேர் கைது செய்யப்பட்டனர்.