சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அந்நாட்டு பிரதி வௌியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
2014 ஆம் ஆண்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயம் தொடர்பில் இதன்போது நினைவுகூரப்பட்டுள்ளதுடன், மஹிந்த ராஜபக்ஸ என்பவர் சீனாவின் பழைய நண்பர் என சீன பிரதி வௌியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.