follow the truth

follow the truth

June, 30, 2024
HomeTOP1கொழும்பில் பல பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு

கொழும்பில் பல பகுதிகளுக்கு நாளை நீர் வெட்டு

Published on

நாளை 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை காலை 9.00 மணி முதல் நள்ளிரவு 12.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு, தெஹிவளை, கோட்டை, கடுவலை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ நகரசபை பகுதிகள், கொட்டிகாவத்தை, முல்லேரியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் 15 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய புனரமைப்பு பணிகள் காரணமாகவும், நீர் சுத்திகரிப்பு முறையின் பராமரிப்பு பணிகள் காரணமாகவும், அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதால், இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ரவீந்திர ஜடேஜாவும் ஓய்வு

இந்திய அணியின் சகலதுறை வீரர் ரவீந்திர ஜடேஜா சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவர்...

இங்கிலாந்து டெஸ்ட் அணிக்கு இரண்டு புதிய வீரர்கள்

சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்கான 14 வீரர்கள் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி...

கிராமத்தில் போதைப்பொருளை ஒழிக்கும் நடவடிக்கை கிராம அதிகாரிகளுக்கு

போதைப்பொருள் வலையமைப்பை முறியடிக்கும் நடவடிக்கைக்காக கிராம சேவைக் களங்களில் போதைக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை குறித்து அறிக்கை தயாரிக்க பொலிஸ்...