follow the truth

follow the truth

April, 7, 2025
Homeஉள்நாடுடயானாவுக்கு எதிரான வழக்கில் இருந்து இரண்டு நீதிபதிகள் விலகல்

டயானாவுக்கு எதிரான வழக்கில் இருந்து இரண்டு நீதிபதிகள் விலகல்

Published on

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை பரிசீலிப்பதில் இருந்து இரண்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விலகியுள்ளனர்.

வெலிகம மாநகர சபையின் உறுப்பினர் பதவியை நீக்கி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த கருத்துக்கள் மூலம் டயானா கமகே நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் கூறி, வெலிகம மாநகர சபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜயவிக்ரமவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்று (26) பிரிதி பத்மன் சூரசேன, குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அதன்போது, ​​இந்த மனுக்களை பரிசீலனை செய்வதிலிருந்து தாம் விலகிக் கொள்வதாக, சம்பந்தப்பட்ட பெஞ்சின் அங்கத்தவர் நீதிபதிகளாக கடமையாற்றிய குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அறிவித்துள்ளனர்.

அதன்படி, இந்த மனுவை ஆகஸ்ட் 5-ம் திகதி பரிசீலிக்க உச்சநீதிமன்றம் திகதியை நிர்ணயம் செய்தது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொலைதூரப் பேருந்துகளுக்கு உணவு வழங்கும் உணவகங்களை ஒழுங்குபடுத்த கோரிக்கை

நீண்ட தூரம் செல்லும் பயணிகள் போக்குவரத்து பேருந்துகளுக்கு உணவு வசதி செய்து தரும் உணவகங்களின் தரம் குறித்து சுகாதாரத்துறையினர்...

பூஸ்ஸ கைதியின் கொலை தொடர்பில் விரிவான விசாரணை

பூஸ்ஸ சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின்...

UPDATE – திடீர் மாரடைப்பால் காலமான NPP நாடாளுமன்ற உறுப்பினர்

தேசிய மக்கள் சக்தி கட்சியின் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கோசல நுவான் காலமானார். திடீர் மாரடைப்பு காரணமாக கரவனெல்ல...