follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1கொழும்பு கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

கொழும்பு கோட்டை, லோட்டஸ் சுற்றுவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வாகன நெரிசல்

Published on

ஆசிரியர் – அதிபர் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாகவும், லோட்டஸ் சுற்றுவட்டம் உள்ளிட்ட வீதிகளின் போக்குவரத்துக்கள் தடைப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கொம்பனிய வீதி பொலிஸார் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதன்படி, ஜோசப் ஸ்டார்லிங், மஹிந்த ஜயசிங்க, அமில சந்தருவன், வாஸ் குணவர்தன, உலப்பனே சுமங்கல தேரர், மயூர சேனாநாயக்க, யல்வல பன்னசேகர தேரர், புஞ்சிஹெட்டி, மொஹான் பராக்கிரம வீரசிங்க மற்றும் இவர்களுடனான உறுப்பினர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (26) காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கொழும்பின் பிரதான வீதிகளுக்கு தடையை ஏற்படுத்த வேண்டாம் எனவும், நிதியமைச்சு, ஜனாதிபதி செயலகம், மத்திய வங்கி, ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றுக்குள் அத்துமீறி நுழையவும் தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் பொறுப்பான ஒரு அரசு அதிகாரியுடன் சட்டப்பூர்வமாக பெற்ற அனுமதியின் அடிப்படையில் நுழைவதற்கு எந்த தடையும் இல்லை என்றும் நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை...

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக சமித்த பெரேரா

லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு...