follow the truth

follow the truth

March, 19, 2025
Homeஉள்நாடுஎரிவாயு வெடிப்பு - பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

எரிவாயு வெடிப்பு – பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

Published on

எரிவாயு வெடிப்பு உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிக்க பொதுமக்களுக்கு 2 விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.

எரிவாயு சிலிண்டர்களில் ஏற்படும் தீ விபத்து குறித்து விசாணைகளை மேற்கொண்டு தீர்வு அறிக்கையை வழங்குவதற்காக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட குழு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், எரிவாயு தொடர்பில் விபத்துக்கள் ஏற்பட்டாலோ அல்லது ஏற்படும் சாத்தியம் காணப்பட்டாலோ அருகில் உள்ள சமையல் எரிவாயு முகவர், பொலிஸ் நிலையம் அல்லது இது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதியின் விசேட குழுவுக்கு அறிவிக்க முடியுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 0115 811 927 மற்றும் 0115 811 929 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்பு கொண்டு எரிவாயு தொடர்பான பிரச்சினைகளை அறிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்றும் மழையுடன் கூடிய காலநிலை

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00...

கட்டான பகுதிக்கு இன்று 16 மணித்தியால நீர்வெட்டு

நீர் கோபுரங்கள் மற்றும் விநியோக அமைப்பின் பராமரிப்பு பணிகள் காரணமாக, கட்டான நீர் விநியோக அமைப்பின் கட்டான வடக்கு...

ஜனாதிபதிக்கும் தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அடிபணியாமல் தமது பணியை ஆற்றுமாறு தென் மாகாண பொலிஸ் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கிய ஜனாதிபதி அநுரகுமார...