இந்தியா – குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் கடும் வெப்பத்தினால் பாதிக்கப்படும் பெண்களுக்காக ‘ஹீட் இன்சூரன்ஸ்’ (Heat Insurance) எனப்படும் சிறப்பு காப்பீடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வெயிலால் மிக மோசமாகப் பாதிக்கப்படுவது பெண்கள் தான். குறிப்பாக மாதம் 5000 முதல் 6000 ரூபாய் வரை மிகக் குறைவான வருமானம் பெறுகின்றனர்.
தினமும் நகரத்தின் குப்பைகளை சேகரிப்பது அன்றாட பணியாக செய்யும் ஹன்சா, “வெப்ப வாதத்தால் பாதிக்கப்பட்டேன், தோலில் வெடிப்புகள் ஏற்பட்டன. இன்சூரன்ஸ் பணமாக கிடைத்த 1168 ரூபாயில் உணவு மற்றும் மருந்துகளை வாங்கினேன்.” என்று கூறுகிறார்.
ஆமதாபாத்தில் 44 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெயில் இருந்தால், காப்பீடு பெற்றவர்களுக்கு ஒரு நாளைக்கு 333 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றன.
வீட்டிற்குள் வேலை செய்பவர்களுக்கும் வெப்ப அலை முக்கிய பிரச்சினை தான். பட்டம் தயாரிக்கும் ஷேக் சபேராவால் வீட்டிற்குள் மின்விசிறியைப் பயன்படுத்த முடியாது. தாங்க முடியாத வெப்பம் அவரது தொழிலை பாதிக்கிறது.
இந்த காப்பீட்டு திட்டத்தின் மூலம் 46,000 பெண்கள் பயனடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.