தேசிய தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, 56 அமைச்சர்கள் தங்களுடைய தங்குமிடத்துக்காக 37 லட்சம் ரூபாய் (வாடகை நிலுவை) செலுத்தத் தவறியுள்ளனர்.
கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட 14 இலட்சத்திலான 19 நிலுவைகள் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை 35 வீடுகளில் இருந்து கிட்டத்தட்ட 23 இலட்சம் பணம் வரைக்கும் வசூலிக்கப்படவில்லை எனவும், 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ஜயவதனகம வீடுகளில் வசித்த 18 அரச அதிகாரிகளிடம் இருந்து கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாயும் வசூலிக்கப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
32 நிறுவனங்கள் 33 கோடிக்கு மேல் கட்டிட வாடகையை அமைச்சுக்கு செலுத்தவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடகை நிலுவையில் 18 சதவீதம், அதாவது 6 கோடிக்கு மேல் அரசு பங்களாக்கள், சுற்றுலா பங்களாக்கள், அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள குடியிருப்புகள் ஆகியவற்றில் இருந்து நிலுவை உள்ளதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தகவல் பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் 2023 ஆண்டு அறிக்கையில் உள்ளடங்கிய கணக்காய்வு அறிக்கைகளைக் குறிக்கிறது.