இவ்வருடம் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டுடன் இணைந்து இந்த போரா மாநாடு எதிர்வரும் ஜுலை மாதம் 7ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை பம்பலப்பிட்டி போரா பள்ளியில் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்திலும் நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டுக்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்தும் சுமார் பதினைந்தாயிரம் போரா சமூகத்தினர் இலங்கை வரவுள்ளதால் அவர்களுக்கான விமான நிலைய வசதிகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருவது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இலங்கை சுங்க, குடிவரவு திணைக்களம், கொழும்பு மாநகர சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், இலங்கை பொலிஸ், முஸ்லிம் சமய திணைக்களம் விவகாரங்கள் பல நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு நிகழ்வில் கலந்துகொண்டது.