காஸா போரின் போது 21,000 பலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக Save the Children அமைப்பு வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது.
4,000 குழந்தைகள் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் அவர்களின் உடல்கள் இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என்று குறித்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்த தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் காஸா பகுதி மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
அந்தத் தாக்குதல்களில் 37,500 க்கும் மேற்பட்ட காஸா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள்.
காணாமல் போன குழந்தைகளில் பெரும்பாலானோர் பெற்றோரைப் பிரிந்ததால் கண்டுபிடிக்கப்படவில்லை.
யுத்தத்தின் போது இழந்த பிள்ளைகளை அவர்களது பெற்றோருடன் ஒன்றிணைப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என Save the Children அமைப்பு சுட்டிக்காட்டியுள்ள போதிலும், அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக இந்த நிலைமை கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தவிர, இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகளும் கணிசமான அளவில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
Save the Children அறிக்கையின்படி, மோதல்களில் 33 இஸ்ரேலிய குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் காஸா பகுதியில் கடத்தப்பட்ட இஸ்ரேலிய குழந்தைகள் அதிகம் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.