follow the truth

follow the truth

November, 27, 2024
Homeவிளையாட்டுஅரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா

Published on

2024 T20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்தியா அணி 24 ஓட்டங்களால் வெற்றிப் பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ரோஹித் சர்மா 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர ்இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

சூர்யகுமார் யாதவ் 31 ஓட்டங்களையும், சிவம் துபே 28 ஓட்டங்களையும் மற்றும் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஹர்திக் பாண்டியா 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

அதன்படி, 206 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவுஸ்திரேலியா அணி சார்பில் ட்ரவிஸ் ஹெட் அதிகபட்சமாக 76 ஒட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுக்களையும் மற்றும் குல்தீப் யாதவ் இரண்டு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியை தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்று 6 புள்ளிகளுடன் இந்தியா அணி முதலிடத்திலும், அவுஸ்திரேலியா 2 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தான் 2 புள்ளிகளுடனும் மற்றும் பங்களாதேஷ் புள்ளிகள் இன்றியும் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐபிஎல் வரலாற்றினை புதுப்பித்த 13 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி

இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில் ஒரு அணியுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இளம் வீரர் என்ற சாதனையை 13 வயது...

இலங்கை வீரர்கள் ஏழு பேருக்கு ஐ.பி.எல் வரம்

இந்த ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக்கில் 7 இலங்கை வீரர்கள் விளையாட உள்ளனர். இந்தியன் பிரீமியர் லீக் வீரர்கள் ஏலத்தில்...

நுவான் துஷார, துஷ்மந்த சமீர வாங்கிய IPL அணி

2025 இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான இரண்டாம் நாள் வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது. இதன்போது, இலங்கையின்...