follow the truth

follow the truth

December, 23, 2024
Homeவணிகம்உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மரங்கள் நடும் திட்டத்தை ஆரம்பித்துள்ள லங்கெம் அக்ரிகல்ச்சர்...

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் மரங்கள் நடும் திட்டத்தை ஆரம்பித்துள்ள லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனம்

Published on

2024 ஜூன் 05 – லங்கெம் லங்கா பொது நிறுவனத்தின் விவசாயப் பிரிவான லங்கெம் அக்ரிகல்ச்சர், ஜூன் 5ஆம் திகதி உலகச் சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியான மரநடுகை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து தனித்துவமான திட்டத்தை ஆரம்பித்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்படி நாடளாவிய ரீதியில் 1300 பலா மரக்கன்றுகள் மற்றும் 200 மரக்கன்றுகள் உட்பட 1500 மரக்கன்றுகளை நடுவதற்கு லங்கெம்
அக்ரிகல்ச்சர் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. நிறுவனத்தின் அடிப்படை நெறிமுறைகள் மற்றும் நீண்டகால நிலையான இலக்குகளுக்கு இணங்க, சுற்றுச்சூழல் மற்றும் உணவுப் பாதுகாப்பிற்கான லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை அவர்களால் வலியுறுத்த முடிந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையர்களுக்கான போஷாக்கு மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இலங்கையில் உணவு பாதுகாப்பை அதிகரிப்பதில் பங்களிப்பதன் மூலம் நாட்டில் நிலையான மற்றும் ஆரோக்கியமான உணவை மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனம்
வெளிப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்தின் மற்றொரு நோக்கம், நிலையான விவசாயம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளை குறைப்பதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகும்.

மலையகம் மற்றும் வடமேற்கு, வடமத்திய, வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு போன்ற 6 பிரதேசங்களை உள்ளடக்கிய இந்த மர நடுகை நிகழ்ச்சித்திட்டமானது கொழும்பு 10 இல் உள்ள லங்கெம்
தலைமை அலுவலகம் மற்றும் பன்னல லங்கேம் அக்ரிகல்ச்சர் மண்டபத்தில் மர நடுகை நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவம், பிராந்திய முகாமையாளர்கள், பிராந்திய
நிறைவேற்று அதிகாரிகள், தொழில்நுட்ப விற்பனை பிரதிநிதிகள் மற்றும் லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் பிராந்திய கள அதிகாரிகள் மற்றும் இலங்கை விவசாய திணைக்களத்தின் பிரதிநிதிகள், பிரதேச செயலக அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர்
கலந்துகொண்டனர்.

இன்று, முழு உலகமும் காலநிலை மாற்றம், குறைந்த மழை வீழ்ச்சி மற்றும் பல்வேறு பாதகமான விளைவுகளால் கடுமையான சுற்றுச்சூழல் சவால்களை எதிர்கொள்கிறது என்பது தெளிவாகிறது. இதனால், உணவுப் பாதுகாப்பை தவிர்க்க முடியாது. காலநிலை முரண்பாடுகள் மற்றும் குறைந்த மழை வீழ்ச்சி காரணமாக விவசாய உற்பத்தித்திறன் வெகுவாகக் குறைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கையில் போதுமான உணவு உற்பத்தியும் சவாலுக்குள்ளாகியுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனம், இந்தச் சவால்களை வெற்றிகொள்வதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கையாக இந்தத் தொடர் மரநடுகைத் திட்டத்தை ஆரம்பித்தது.

கிராமப்புறங்களை அடிப்படையாகக் கொண்டு நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் கிராமப்புற சமூகங்களுக்கு இச்செடிகளை விநியோகிப்பதன் மூலம் சுற்றாடல்
பாதுகாப்பிற்கான தமது பொறுப்புணர்வை உருவாக்குவதே லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் நோக்கமாகும்.

மேலும் இந்நிறுவனம் இந்த மதிப்புமிக்க தாவரங்களை நடுவதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான அறிவு மற்றும் கருவிகளை வழங்கி கிராமப்புற சமூகத்தை மேம்படுத்தவும் பாடுபட்டுள்ளமை
சிறப்பம்சமாகும்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த லங்கெம் அக்ரிகல்ச்சர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. நிஷாந்த ஜயமான்ன, உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள மரநடுகை வேலைத்திட்டம் இலங்கையின் சுற்றாடல் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு முக்கிய நடவடிக்கையாக
அமையும். உணவு பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் இந்த தனித்துவமான வேலைத்திட்டத்தின் மூலம், லங்கெம் அக்ரிகல்ச்சரின் நிலைத்தன்மை மற்றும் கிராமப்புற மக்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றில் ஆர்வம் நன்றாகவே பிரதிபலிக்கிறது. இதன் மூலம், காலநிலை மாற்றத்தை
எதிர்ப்பதற்கும், பல்லுயிர் பெருக்கத்திற்கும், மண் வளத்தை வளர்ப்பதற்கும் நேரடியாக பங்களிக்கிறோம்.

இதன் மூலம் வளமான மற்றும் நிலையான எதிர்காலத்திற்கு தேவையான ஆற்றலை வழங்குவதற்கு நாங்கள் உழைத்துள்ளோம் என்பதையும் குறிப்பிடலாம். என தெரிவித்தார்.

1964 ஆம் ஆண்டு Royal Dutch Shell ஆல் ஒரு விவசாய இரசாயன உற்பத்தியாளர் மற்றும் விநியோகஸ்தராக நிறுவப்பட்ட லங்கெம் லங்கா பொது நிறுவனம் அதன் பின்னர் வண்ணப்பூச்சுகள்,
இரசாயனங்கள், நுகர்வோர் பொருட்கள், பூச்சி நாசினி கட்டுப்பாடு, ஹோட்டல்கள் மற்றும் பொதியிடல் துறைகள் போன்ற பல்வேறு வணிகங்களில் ஈடுபட்டுள்ளது. இன்று, மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த 9 முன்னணி தொழில்களில் உள்ள 25 துணை நிறுவனங்கள் மூலம், லங்கெம் தனது தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வாடிக்கையாளருக்கு கொண்டு வர முடிந்தது. சீரடைந்து வரும் பொருளாதாரம், நிலையான எதிர்காலம் மற்றும் நல்ல சமுதாயம் ஆகியவற்றிற்காக அர்ப்பணிக்கப்பட்ட நிறுவனம், வணிக வளர்ச்சி
மற்றும் சிறந்த வாழ்க்கை முறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் தனது செயல்பாடுகளை
மேற்கொள்கிறது.

லங்கெமின் விவசாயப் பிரிவான லங்கெம் அக்ரி, 1964 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் விவசாய இரசாயனத் துறையில் முன்னோடியாக இருந்து வருகிறது. விவசாயிகளின் நண்பன் என இலங்கையர்கள் மத்தியில் அறியப்படும் இந்நிறுவனம், விவசாய இரசாயனங்கள், நெல், மரக்கறி விதைகள், உரங்கள் மற்றும் தாவர ஊக்கிகள் போன்ற மேம்பட்ட விவசாய தீர்வுகள் மற்றும் உற்பத்திகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

மேலும், லங்கெம் அக்ரியின் அதிநவீன வேளாண் இரசாயன உற்பத்தி வசதிக்கு ISO 9001-2015 (தர முகாமைத்துவம்), ISO 14001-2015 (சுற்றுச்சூழல் முகாமைத்துவம்) மற்றும் ISO 45001-2018 உடல்நலம் மற்றும் சுகாதார முகாமைத்துவம் உட்பட பல சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. லங்கெம் அக்ரியின் வணிகப் பிரிவுகள் விவசாய இரசாயனங்கள், நெல் விதைகள், காய்கறி விதைகள், உரங்கள், தாவர ஊக்கிகள் மற்றும் பிற தயாரிப்புகளாகும்.

விஞ்ஞான ரீதியிலான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிலையான விவசாயக் கைத்தொழில்களை அபிவிருத்தி செய்வதில் முன்னணி வகிக்கும் நிறுவனமாக, இலங்கையில் விவசாய உற்பத்தி மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்துவதில் லங்கெம் அக்ரி கணிசமான பங்கை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

Fashion Bug தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக LMD வாடிக்கையாளர் ஆய்வில் முதலிடத்தில்

இலங்கையின் விருப்பத்திற்குரிய பேஷன் வர்த்தகநாமமான Fashion Bug, LMD சஞ்சிகையின் 2024 வாடிக்கையாளர் விசேடத்துவ ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டாவது...

ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் அதிகரிப்பு

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தற்காலிக தரவுகளின்படி, 2024 ஒக்டோபரில் வர்த்தகப் பொருட்களின் ஏற்றுமதி செயல்திறன் 1,097.1 மில்லியன் அமெரிக்க...

HNB Finance இன் “வளர்ச்சிக்கான முன்னேற்றத்தின்” மற்றுமொரு நிதியறிவு பயிற்சிப்பட்டறை நட்டம்புவை மற்றும் நுவரெலியாவில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB Finance PLC, நுரெலியா மற்றும் நிட்டம்புவை நகரங்களை மையமாகக் கொண்டு...