தான் ஜனாதிபதி ஆனதும் என்னில் உள்ள வழக்குகள் செல்லுபடியற்றதாகிவிடும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்திருந்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
“.. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன். அதில் வெற்றியும் பெறுவேன். ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் எனக்கு எதிரான வழக்குகள் அனைத்திலிருந்தும் நான் அரசியலமைப்பின் பிரகாரம் செல்லுபடியற்றதாகிவிடும். அதன்பின்னர் கட்சியின் தலைமை குறித்து பிரச்சினைகள் இல்லை. கட்சியின் போலியான தலைமையினை பெற்றுள்ளவர்கள் இந்த கண்டிக்கு வந்தால் அடித்து விரட்டுவதாக எல்லோரும் கூறினார்கள். இவர்கள் எல்லோரிடமும் கேளுங்கள். கட்சி ஆதரவாளார்கள் எல்லோரும் எம்முடன் ஆதரவுடன் இருக்கிறார்கள். கட்சியின் பத்து பதினைந்து பேர் தங்கள் சுய இலாபத்திற்காக கட்சியினை காட்டிக் கொடுக்க முயற்சிக்கின்றனர். இம்முறை நாம் புதிய சின்னத்திலேயே களமிறங்க உள்ளோம்…”