நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நீக்குவதற்கு கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று (24ம் திகதி) இடம்பெறவுள்ள அக்கட்சியின் அகில இலங்கை செயற்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
விஜயதாச ராஜபக்ஷ கொழும்பு மாவட்டத்தில் பொதுஜன பெரமுனவில் போட்டியிட்டு பாராளுமன்ற உறுப்பினரானார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவியினை விஜயதாச ராஜபக்ஷ அண்மையில் பொறுப்பேற்றமையால் இந்த கேள்வி அண்மைக்காலமாக இழுத்தடிக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து நீக்கப்பட்டால் ஜனாதிபதியுடன் இணைய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் அரசியல் உள்ளக செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.