follow the truth

follow the truth

July, 6, 2024
HomeTOP1இலங்கையர்கள் தொடர்பில் கலந்துரையாட இன்று ரஷ்யாவிற்கு தூதுக்குழு

இலங்கையர்கள் தொடர்பில் கலந்துரையாட இன்று ரஷ்யாவிற்கு தூதுக்குழு

Published on

ரஷ்யா – உக்ரேன் போரில் போரிடுவதற்கு ரஷ்யாவின் கூலிப்படையில் கடமையாற்றும் பாதுகாப்புப் படையினரை இந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கான பேச்சுவார்த்தைக்காக இலங்கைப் பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (24) ரஷ்யாவின் மொஸ்கோ நகருக்குச் செல்லவுள்ளது.

இந்த தூதுக்குழுவில் வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் குழு, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் காமினி வலேபொட ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

மேலும் இந்த குழுவில் தயாசிறி ஜயசேகர. ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் சமன் வீரசிங்க உள்ளிட்டோரும் உள்ளடங்குகின்றனர்.

எதிர்வரும் 26ஆம் திகதி மொஸ்கோவில் அந்நாட்டு பிரதிநிதிகள் சந்திப்பதுடன், ரஷ்ய பாதுகாப்பு பிரதி அமைச்சர் மற்றும் வெளிவிவகார பிரதி அமைச்சர் ஆகியோரும் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

கனவுலகில் இருக்காமல் நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் செயற்படுத்தி முன்னேறுவோம்

நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப்...

தயாசிறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைவதற்கு...

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகள் விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்ட கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மற்றும்...