இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் சூப்பர் 8 சுற்றில் நேற்று(23) நடைபெற்ற இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளமை விசேட அம்சமாகும்.
நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து, அமெரிக்காவுக்கு முதலில் துடுப்பெடுத்தாட்டத்திற்கு வாய்ப்பளித்தது.
அதன்படி துடுப்பெடுத்தாடிய அடித்த அமெரிக்கா 18 ஓவர்கள் 5 பந்துகளில் 115 ஓட்டங்களை எடுத்தது.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 117 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
அணியின் தலைவர் ஜோஸ் பட்லர் 83 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டுக்கான இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிக்கு குரூப் 2 பிரிவில் முதல் அணியாகத் தகுதி பெற்ற முதல் அணி என்ற பெருமையை இங்கிலாந்து பெற்றது.