அடுத்த வாரம் பட்டாசு கொளுத்தி பால் சோறு சாப்பிடுவதற்கு அரசாங்கங்கள் தயாராகி வருவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிடுகின்றார்.
இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக எதிர்வரும் 27 அல்லது 28ஆம் திகதிகளில் ஜனாதிபதி அறிவிக்கவுள்ள நிலையில், இந்த கொண்டாட்டங்களை நாடளாவிய ரீதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டு சர்வதேச நிதிச் சந்தையில் முக்கிய அங்கத்துவ நாடாக மாறியுள்ளதாக ஜனாதிபதி அறிவிக்கவுள்ளதாகவும் அதேவேளை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதாகவும் ஜனாதிபதி அறிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஒரு நாடு திவாலானதா இல்லையா என்பதை சர்வதேச கடன் தர நிர்ணய முகவர் நிலையங்களே தீர்மானிக்கின்றன என்றும் மக்களுக்கு பொய் சொல்ல வேண்டாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்திருந்தார்.