follow the truth

follow the truth

April, 7, 2025
HomeTOP2நாட்டில் தற்போது டீல் அரசியல் சதிகள் அதிகரிப்பு

நாட்டில் தற்போது டீல் அரசியல் சதிகள் அதிகரிப்பு

Published on

ஆட்சியாளர்களிடம் தமது தனிப்பட்ட தேவைகளுக்கு ஏற்ற திட்டங்களை செயல்படுத்த பணம் இருந்தாலும், பாடசாலைகளில் உள்ள குறைபாடுகளை களைவதற்கு அவர்களிடம் பணம் இல்லை. போலி வேலைகளுக்கு முடிவில்லாது பணம் ஒதுக்கீடு செய்கின்றனர். இந்தப் பணத்தில் டீல் அரசியலும் கூட முன்னெடுக்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 251 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், குருநாகல், மாவத்தகம, பரகஹதெனிய தேசிய பாடசாலை வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 22 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

பிரபஞ்சம் மற்றும் மூச்சுத் திட்டங்களை முன்னெடுத்து வரும் போது பாராளுமன்றத்திலும் வெளியிலும் தன்மீது கோபத்தை வெளிப்படுத்தி குரோதம் காட்டுகின்றனர். நான் பிள்ளைகளுக்கு மது, போதைப்பொருள், சிகரெட்டை பகிர்ந்தளிக்கவில்லை. கணினிகள், அகராதிகளையே பகிர்ர்ந்தளிக்கிறேன். இவை தவறான விடயங்கள் அல்ல எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஆட்சியாளர்கள், தலைநகரின் ஆடம்பர குளிரூட்டி அறைகளில் இருந்து கொண்டு ஒரு குறிப்பிட்ட கும்பலுடன் டீலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நாட்டிலுள்ள சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் உயர் மட்டத்தை அடைவதை அவர்கள் விரும்பவில்லை. காலத்திற்கேற்ற நவீன கல்வியை வழங்காது, பழமைவாத கல்வியை வழங்குவதன் மூலம் இந்த பிள்ளைகளை அடிமைகளாக வைத்திருப்பதே அவர்களின் நோக்கமாக அமைந்து காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புரட்சிகர கோஷங்களை எழுப்பும் கட்சிகள் அனைத்தும் தற்போது அரசாங்கத்துடன் டீலில் ஈடுபட்டுள்ளன. மக்களின் வாக்குகளால் ஆட்சிக்கு வந்து மக்களையே காட்டிக்கொடுக்கும் அரசியல் கலாச்சாரம் இந்நாட்டில் காலாகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையை மாற்றியமைப்போம். பணத்துக்காக பிள்ளைகளையும் மக்களையும் ஏமாற்றி அவர்களின் கொள்கைகளை காட்டிக்கொடுக்கும் அரசியலும், டீல் அரசியலும் நாட்டில் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நல்ல நல்ல அரசியல் டீல்களை எதிர்காலத்தில் கண்டுகொள்ளலாம். தமது சுய கௌரவத்துக்கு துரோகம் இழைத்து டீல் பேசும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் பதில் அளிப்பார்கள் என நம்புவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிரம்பின் வரியைத் தவிர்க்க ஹர்ஷவின் பரிந்துரை

டிரம்பின் வரி பிரச்சினையை சமாளிக்க இலங்கை பிராந்திய விரிவான பொருளாதார கூட்டாண்மையில் (Regional Corporation economic partnership –...

மோடியின் வருகை நமக்கு ஒரு மரியாதை.. அவரைப் போன்ற ஒருவர் வரும்போது, ​​நாம் பொருளாதார மற்றும் அரசியல் ஒப்பந்தங்களில் கையெழுத்திட வேண்டியதில்லை..- டில்வின்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகை இலங்கைக்கு கிடைத்த கௌரவம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்...

தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை சந்தித்தார் மோடி

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய பிரதமர் மோடி தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இது குறித்து அவர்...