மௌபிம ஜனதா கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளராக அருளானந்தம் அருண் என்ற அருண் சித்தார்த் நேற்றைய தினம் (22) நியமிக்கப்பட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் வர்த்தகர் திலித் ஜயவீர அவர்களினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
கட்சியின் உயர்பீட உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அருண் சித்தார்த் யாழ்ப்பாணத்தில் இயங்கிய ஆவா கும்பலின் தலைவன் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டதன் மூலம் சிங்கள சமூகத்தில் மேலும் பிரபலமடைந்தார்.
எனினும் கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் ரவி கருணாநாயக்க அவர்களால் தன்னை அந்த மாவட்டத்தின் அமைப்பாளராக நியமிக்க நடவடிக்கையும் எடுத்திருந்தவர்.
அடியார் விபுலானந்த சுவாமிகள், யாழ் மகளிர் முன்னணியின் தலைவி உட்பட பல சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
நாட்டை வீழ்ச்சியடைந்துள்ள பாதாளத்தில் இருந்து மீட்பதற்குத் தேவையான ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்குவதாக அருண் சித்தார்த் அங்கு தெரிவித்தார்.
2020 பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கீழ் போட்டியிட்டார்.
ஆனால், அங்கு அவரால் வெற்றி பெற முடியவில்லை.
அருண் சித்தார்த்தன் தற்போது யாழ்ப்பாண சிவில் சமூகத்தின் தலைவராக கடமையாற்றி வருகின்றார்.