இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி DLS method முறையில் 28 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.
North Soundயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 08 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்றது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பில் அணியின் தலைவர் Najmul Hossain Shanto அதிகபட்சமாக 41 ஓட்டங்களையும், Towhid Hridoy 40 ஓட்டங்களையுடம் பெற்றனர்.
பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பில் Pat Cummins 03 விக்கெட்டுக்களையும், Adam Zampa 02 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 11.2 ஓவர்கள் நிறைவில் 02 விக்கெட்டுக்களை இழந்து 100 ஓட்டங்களை பெற்ற நிலையில் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
இதன்படி அவுஸ்திரேலிய அணி DLS method முறையில் 28 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பில் David Warner ஆட்டமிழக்காமல் அதிகபட்சமாக 53 ஓட்டங்களை பெற்று கொடுத்தார்.