நாட்டில் பரவலாக கேஸ் அடுப்பு வெடித்துவரும் இன்றைய சூழ்நிலையில் ,அம்பாறை மாவட்டத்திலுள்ள வளத்தாப்பிட்டியிலும் கேஸ் அடுப்பு வெடித்துச்சிதறியுள்ளது.
இச்சம்பவம், இன்று காலை 9 மணியளவில் வளத்தாப்பிட்டியைச்சேர்ந்த செல்லையா விஜயா என்பவரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தை கேள்வியுற்றதும் அப்பகுதிக்கான கிராமசேவை உத்தியோகத்ததர் ஏ.ரவி அங்குவிரைந்து சம்பவத்தை உறுதிப்படுத்தினார். யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை எனினும் காஸ் அடுப்பு சிதறியுள்ளது.
இதேவேளை காதாத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள கல்லடி பாலத்துக்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் இன்று பகல் 11.30 மணிக்கு காஸ் அடுப்பில் சமைக்க முற்பட்டபோது எரிவாயு அடுப்பு வெடித்து சிதறியுள்ளது.
மேலும் அம்பாறை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிலுள்ள வளத்தாப்பிட்டி பிரதேசத்திலுள்ள வீட்டில் எரிவாயு அடுப்பு இன்று பகல் 11 மணியளவில் வெடித்து சிதறியுள்ளதாகவும் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சம்மாந்துறை பொலிசார் தெரிவித்தனர்
இந்த எரிவாயு வெடிப்பு சம்பவம் தொடர்பாக அந்தந்த பிரதேச பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையிலேயே நல்லூர் கோவில் வீதியில் உள்ள ஓரு வீட்டில் இன்று மதிய உணவு தயாரித்துக்கொண்டிருந்த போது அடுப்பு எரிவதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் வெளியில் ஓடிச் சென்று முன்னால் இருந்த வர்த்தக நிலையத்திலுள்ளவர்களை அழைத்துள்ளார்.
இதன்போது உடனடியாக ஓடிச் சென்ற வர்த்தக நிலையத்திலுள்ளவர்கள் எரிவாயு சிலிண்டரை அகற்றி தீயை அணைத்தமையினால் பாரிய சேதங்கள் எதுவும் ஏற்படாது தடுக்கப்பட்டுள்ளது.
இன்று பம்பலப்பிட்டியில் பாடசாலை வீதியிலுள்ள வீடொன்றில் எரிவாயு வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
நான்கு அடுப்புகளைக் கொண்ட எரிவாயு குக்கர், எரிவாயு சிலிண்டரில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் மற்றும் எரிவாயு குழாய் வெடித்துச் சிதறியதாக வீட்டின் தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு குக்கரை விற்ற நிறுவனத்திடம் தெரிவித்ததாகவும், அவர்கள் வந்து ரெகுலேட்டர் மற்றும் பைப்பை ஆய்வு செய்து அதில் குறைபாடுகள் இல்லை என்று சான்றிதழை வழங்கியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்
இருப்பினும்,இன்று காலை எரிவாயு அடுப்பு இயக்கப்பட்டபோது அது வெடித்ததாக அவர் கூறினார்.
மேலு சில நாட்களுக்கு முன்னர் தான் எரிவாயு சிலிண்டரை வாங்கியதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.