follow the truth

follow the truth

April, 19, 2025
Homeவிளையாட்டுஇங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி

Published on

இருபதுக்கு20 உலகக் கிண்ண தொடரில் இன்று (20) காலை நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 180 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Johnson Charles அதிகபட்சமாக 38 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணி சார்பில் Jofra Archer, Adil Rashid, Moeen Ali மற்றும் Liam Livingstone ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

181 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய இங்கிலாந்து அணி 17.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு இலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் Phil Salt அதிகபட்சமாக 87 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் Andre Russell மற்றும் Roston Chase ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதுகின்றன

இந்தியன் ப்ரீமியர் லீக் 34வது போட்டி இன்று (18) நடைபெறவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள்...

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த தசுன் ஷானக

நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்...

உஷாராக இருக்க ஐபிஎல் அணிகள், வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை

உலக அளவில் நடைபெறும் டி20 லீக்கில் சிறப்பு வாய்ந்ததாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) விளங்குகிறது. இதில் ஏராளமான சர்வதேச...