தென் கிழக்கு ஆசியாவில் முதல் நாடாக தாய்லாந்தில் ஒருபால் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற மேலவையான செனட்டில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் ஒருபால் திருமணத்தை சட்டமாக்குவதற்கு 130 வாக்குகள் ஆதரவாகவும் எதிராக நான்கு வாக்குகளும் பதிவாகியுள்ளன. இந்த சட்டம் தற்போது மன்னரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இந்த மசோதா செனட் குழு ஆய்வு செய்த பின்னர் அரசியலமைப்பு நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும். அதன்பின் மன்னரிடம் இருந்து ஒப்புதல் வழங்கப்பட்ட பின் சட்டமாக்கப்படும்.
ஒருபால் திருமணத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் மூன்றாவது ஆசிய நாடாகவே தாய்லாந்து பதிவாகவுள்ளது. இதற்கு முன் தாய்வான் மற்றும் நேபாளத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.