ஜனாதிபதி என்ற வகையில் இந்த நாட்டில் எந்த ஒரு பிள்ளையும் பாதிக்கப்படக் கூடாது என தீர்மானித்துள்ளதாகவும், இரண்டு வருட குறுகிய காலத்தில் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு இன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
பிள்ளைகளுக்கு கல்விஅறிவை வழங்குவதற்காக ‘ஜனாதிபதி கல்வி புலமைப் பரிசில் திட்டம்’ ஆரம்பிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
2022 ஆம் ஆண்டில் (2023), உயர் தரம் கற்கும் 60 மாணவர்களைத் தெரிவு செய்து 100 வலயங்கள் உள்ளடங்கும் வகையில் ஒரு மாணவருக்கு மாதாந்தம் 6 000 ரூபா வீதம் 6000 மாணவர்களுக்கு 02 வருடங்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்திட்டத்திற்கு அமைய, நாடளாவிய ரீதியில் 10,126 பாடசாலைகளை உள்ளடக்கி தரம் 1 முதல் தரம் 11 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு இந்த புலமைப்பரிசில் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
புலமைப் பரிசில்கள் வழங்கும் திட்டத்தை அடையாளப்படுத்தும் வகையில் இன்று 5108 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் மற்றும் பரிசில்கள் வழங்கப்பட்டன.
நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து விடுவிக்க தேவையான திட்டத்தை செயல்படுத்தியுள்ளோம். அதன் மூலம் அடுத்த 5-10 ஆண்டுகளில் பிள்ளைகளுக்கான சிறந்த நாட்டை உருவாக்குவதே எங்கள் நோக்கமாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த பொருளாதார நெருக்கடியால், பலர் தங்கள் வருமான வழிகளை இழந்துள்ளனர். அதன்படி, அஸ்வெசும திட்டத்தின் மூலம் 24 இலட்சம் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். அத்துடன், மக்கள் வாழும் காணியின் சட்டப்பூர்வ உரிமையை மக்களுக்கு வழங்க உறுமய வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
நாட்டின் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்தி, உங்கள் அனைவருக்கும் இந்த உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, மக்களுக்கு வருமானம் அளிக்கவும், உரிமைகளை வழங்கவும் பிள்ளைகளுக்கு கல்வி வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். எனவே இப்பிள்ளைகள் இந்த உதவித்தொகையை சரியான முறையில் பயன்படுத்தி தங்கள் கல்வியை மேம்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” என ஜனாதிபதி தெரிவித்தார்.